என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!

சிசுவதை !!

கருத்தரித்த சில நொடிக்குள்
காலனை அழைத்து காவு கொடுத்தார்கள்
கடவுள் பெண்ணாக படைத்ததால்..!!

உணவு..!!


என் தனிமைக்கு உணவு
உந்தன் நினைவு..!!
ஜீரணிக்க முடியாத 
கலவை சாப்பாடு  நீ..!!

அலை


உன் நினைவலை வீசுகையில்
என் சிரிப்பலை  ஓய்ந்துவிடுகின்றது..!!
  

வசந்த காலம்..!!



நீ பயணம் செய்த வழிதடம்
என் வாழ்வின் வசந்த காலம்
நீ இறங்கி சென்ற பேருந்து நிறுத்தம்
என் மனது நின்றுபோன நிழல் குடை..!!

வரம்-தாரம் !!


வரம் தர வேண்டுகிறேன்
உன் தாரமாக வேண்டி..!!

காதல் பல்கலைகழகம்!!

உன்னை கற்க ஒரு கல்லூரி
நானும் மாணவனானேன்
உன் காதல் பல்கலைகழகத்தில்..!!

என்னில் நீயாக!!



உறக்கமற்ற இரவினில்
உன் உருவம்
என் நினைவினில் ..
உறக்கம் துறந்த காலையில்
உன் உருவம்
என் வீட்டு கண்ணாடியில் ..
என்னில் நீயாக..!!

உன் நினைவுகளோடு வாழ்ந்துவிடுவேன்..!!



தனிமையில் வாழ்ந்து பழக்க பட்டவனடி நான்..
துணைக்கு வந்த உன் நினைவுகள்..
துணைவியாய் மாறி போயின..
நிஜத்தில் நீ இல்லை என்றாலும்
வா ழ்ந்துவிடுவேன் அன்பே..
என் மீதி வாழ்கையை..
என் நிழலாகிப்போன உன் நினைவுகளோடு..!

chain smoker

உன்னை  காதலித்து .. கரம்பிடித்து ..
உன்னையே  சதா  சுவாசித்து  பார்த்து ..
புண்ணாகிய   என்  நெஞ்சம் ..
புகை  விட்டு  ஆரிகொண்டிருக்கின்றது  ..
கல்லறையில் ..!!

(By chain smoker!)

உவமை

பூக்களுடன்  உன்னை  உவமை  படுத்தியதில் ..
முல்லைக்கு  மட்டும்  என்ன  கோவமோ  ?
பூக்க மறுக்கின்றதடி  காலை  வேலையில் ..!

இரவெல்லாம்  இனிய 
சூடேற்றும்  சூரியனே ..
பகலெல்லாம்  வெட்கம் 
சிந்தும்  பால்  நிலவே ..
பாரடி  பகலெல்லாம் 
நீ  சிந்திய  வெட்கங்கள் ...
நட்சித்திர  சில்லுகளாய் ...
நம்  இரவினை  அலங்கரிக்க..
அழகாய்  ஓரிடம்  கூட்டம் போடுகின்றது...

ஒட்டிக்கொள்ளாத உன் 
இரு  துருவ  காந்த புலன்கள் ..
சுண்டி  இழுக்கின்றது 
என்  இரும்பு  மனதினை ..

முத்த  மழை  என  தொடங்கி ...
 பல  பகிர்தலுக்கு  பின் 
 என்  சூடுகளும் 
 உன்   வெட்கங்களும் 
 மெது  மெதுவாய்  உறங்கி  களிக்கும்  ..!

கிசுகிசு

என்ன  தூதன்பே 
அனுப்பினாய்  காற்றிடம் ??
உரசி  செல்லும்  போதெல்லாம் 
மெல்ல  கிசுகிசுக்குதே..!

இது அப்போ கோவில் இல்லையா ??

ஒரு தேவதை அவள் குளித்த
நீரை புனித தீர்த்தம் என நினைத்து..
தலையில் வைக்க ..
சட்டென்று சுய நினைவுக்கு வந்தேன் ..
சேலையில் அவள் சிலை போல நடந்து செல்ல ..
 |
 |
 |
 \/
இது அப்போ கோவில் இல்லையா ??

இலகுமா உன் மனம் ?

கரை புரண்டு ஓடுகின்றது
கண்ணீர் வெள்ளம் இங்கே..!!
மனசென்னும் மதகு
மூடியே உள்ளது அங்கே ..!!

முடிவு ??


என் விழி வழியே பாயும்  நதி நீருக்கு  
முடிவென்னும் கடல் எதுவோ ??

தூரம் !!


தூரமெல்லாம் ஒரு
தூரமில்லை அன்பே.....
நமக்குள் வந்த இவ்விடைபட்ட
இடைவெளியை பார்கையில்..!!

உன் நினைவுகளோடு வழ்ந்துவிடுவேன் !!



தனிமையில் வாழ்ந்து பழக்க பட்டவனடி நான்..
துணைக்கு வந்த உன் நினைவுகள்..
துணைவியாய் மாறி போயின..
நிஜத்தில் நீ இல்லை என்றாலும்
வழ்ந்துவிடுவேன் அன்பே..
என் மீதி வாழ்கையை..
என் நிழலாகிப்போன உன் நினைவுகளோடு..!

அழகிய ஆக்கிரமிப்பு:

பட்டா ஏதும் எழுதி
கொடுத்து விட்டாயா??
அன்பே உண் ஸ்டிக்கர் பொட்டுக்கு ?
நான் முத்தம் தரும்
இடத்தை ஆக்கிரமிப்பு
செய்து கொண்டு விட்டதே !!

உன் நினைவுகளால்:



தனி மரம் நான்...
இன்று தோப்பாகி நிற்கிறேன்..
உன் அத்தனை நினைவுகளும்
ஒன்று சூழ..!!

முகவரி இல்லாமல்..சேர்ந்தது முத்தம் !!


விழிகளிலே அவள் தரிக்கும் மடல்களுக்கு
விடை தந்து கொண்டிருந்தது என் விழிகளும்..
இடை இடையே முகவரி இல்லாமல் பயணிக்கும்
இம்மடல் முறையான முகவரிடம் கொண்டு
சேர்த்தது காதல்..!! அப்படியே நான் அனுப்பிய
முத்தத்தையும் .. பெற்றுக்கொண்டு
வெட்கத்தோடு அவள் சிரித்துகொண்டாள்..!!

பட்டு போன மரம்


கண்ணில் தோன்றி மறைவதுதான்
கானல் நீர் என்றால்..!
நீயும் அப்படி தான் அன்பே...
என் வாழ்வில் மலர்ந்து
மறைந்துவிட்டாய்..!
ஆனால் நான் தான்
பட்டு போன மரம் போல
நீ விட்டு போன இடத்திலே
நின்றுகொண்டிருகிறேன்
மீண்டும் ஒரு முறை துளிர்க்காத
நம் காதல் என்று !!

அழகாய் அவள் அடம்பிடிப்பாள்


அடி நெஞ்சில் என்னை நினைத்து..
அவள் படும் வெட்கங்கள்...
விழி அசைவில் மனம் மயக்கி
தலை கவிழ்ந்து கிடக்கையில்...
என் விரல் பிடித்து சொடுக்கு எடுப்பாள் ..
நுனி நாக்கில் கோலமிட்டு
இதழ் முத்தம் தெரிப்பாள் ...
சிறு தீண்டலில் சொக்கி கிடக்க..
சிவப்பணுக்கள் ஸ்தம்பித்து போகுதே...
அவள் மூச்சு காற்று உஷ்ணத்தில்
என் மோக தீ பரவுதே...
வியர்வை மழை பொழிகையில்
உடல் மெல்ல மெல்ல நனையுதே...
கட்டி வச்ச காலங்கள்
அதில் பஸ்பமாகி போகுதே...
சாமத்து கால பூஜையில்
சமுத்திரமொன்று உடைகையில்..
அது சொர்க்கத்தில் எனை நிறுத்தி
உயிர் சுகமொன்று காணுதே..!!

குடி குடியை கெடுத்துவிட்டது..!!

 
மனமுடித்த மறுநாளே வந்தது
எமனிடம் இருந்து தூது..
மணவாளன் அவனோ
நண்பர்களுக்கு விருந்தளிக்க..
மாங்கல்யம் எற்றியவளோ
தனிமையில் தத்தளிக்க..
குடி குடியை கெடுத்துவிட்டது..!!

நிலா பெண்

நிலா நிலா ஓடி வா என்று
தன் குழந்தைக்கு சோறு
ஊட்டுகிறாள் எதிர்வீட்டு மாமி.
அது என் வீட்டில் தாழ்வாரத்தில்
தவழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல் ..!!

கண்கலங்கிவிட்டாள்..!!



கோவிலில் பிரசாதம் தந்தவுடன்
அவள் நெற்றியில் வைத்துவிட்டு
கண்களை மூட சொல்லி ஊதி விட்டேன்..
எதற்காக அப்படி செஞ்சிங்க என்றாள்..
உன் கண்கள் எதற்காகவும்
கலங்கக்கூடாது என்பதற்காக தான் என்றேன்..
மெல்ல உருகி , கண்கலங்கி
சாய்ந்துவிட்டாள் என் மார்பில் ..!!




விடியலில் கண் விழிக்க
வெண்மதி அவள் நீராடிவிட்டு
தேநீரோடு கையை நீட்டுவாள் ..
சக்கரை இருக்கின்றதா என்றால்
உதட்டை கடித்து விட்டு
ஹ்ம்ம் இருக்கின்றது என்பாள்
என் இனியவள் !!

கதகதப்பில்..!!


இந்த கோடை காலத்திலும்
போர்வையா என்று விலகினால்
திட்டுகிறாள்.. காரணம் கேட்டால்
மாமா நான் எப்போதும் உன்
கதகதப்பிலே இருக்கவேண்டும் என்கிறாள் ..!!



எதிர்மறையோடு நீ
சண்டை போட்டாலும் ..
சண்டை முடிந்த
மூன்றாவது நிமிடத்தில்
ஒரு முத்தத்தோடு
உன் முசுடுகளை வெட்டி எரிந்து
கட்டி அணைத்து முடிப்பாயே ..
ஹ்ம்ம் நீ செல்ல கோபக்காரி தான்..!!


செல்லமாக என் கன்னத்தை
கிள்ளி விளையாடுவாள்
கோபம் வந்தால் காதை திருகுவாள்
இப்படியே இவள் சேட்டைகளெல்லாம் தொடரும் ..



முறையில்லாமல் உந்தன்
நினைவுகள் உரிமையோடு
என்னுடன் சண்டை போடுதடி ..
நான் அவற்றிற்கு விடுதலை
தருவதில்லையாம் !!

உதடு


வெளி வட்டாரத்தில் முத்தம் கேட்டால்
கண்டனம் தெரிவிப்பாள்
செய்கையில் வினவினால்...??
சாயம் பூசாத உதடு
சிவந்து விடுமாம் வெட்கத்தில்...!!

குழந்தையை போல..




சமைத்து முடித்தபின் எனக்காக
சாப்பிடாமல் காத்திருப்பாள்
சரி வா சாப்பிடலாம் என்று
இரண்டு தட்டில் போட்டால்...
சின்ன குழந்தையை போல
அடம்பிடிப்பாள் ஆ என வாயை
திறந்து வைத்துகொண்டு ஊட்ட சொல்லி..!!



பொய் சொன்னால் கோபப்படுவாள்
சிடுமூஞ்சியாய் அமர்ந்திருப்பாள்
கோபமா என்று கட்டிப்பிடித்து
ஒரு முத்தம் தந்தால்....
இன்னொரு பொய்
சொல்லுங்களேன் என்பாள் !!

காத்திருப்பு !!

காதலிப்பது மட்டுமா காதல்
காத்திருப்பதும் தான்
காதல் என்பாயே..
எதுவரை என்று சொல்லாமல்
சென்று விட்டாயே அன்பே ..
என் வாழ்கையின்
இறுதி காலத்திலும்
உனக்காகவே காத்திருக்றேன்..!!


கனவிலெல்லாம் என்னை கண்டபடி
ஏதேதோ செய்கிறாய் கண்மணி ..
என்னை காணும் போது மட்டும்
ஏன் இப்படி நகத்தை கடித்தபடி
தரையை பார்த்து நிற்கிறாய் ??


வெளியே சிரித்துக்கொண்டு..உள்ளேஅழுவதற்கு நான்
ஒன்றும் நடிகன் அல்ல அன்பே.. உன் காதலன்..

எப்போதும் சிரிப்போடு மலரும் இதழ்கள்..
இன்று வெறுப்போடு அழுது கொண்டு இருக்கின்றதடி..

உன்னை பிரிந்து வாடும் இந்த நொடிகள்..
ஏக்கமெனும் கடிகாரத்தில்உறங்காமல்
ஏனோ என்னையே சுற்றிவருகிறது..!!
 

தரிசனம் !!


சூரியனை எதிர் பார்த்து
கண்விழித்த எனக்கு..
ஒரு அழகிய நிலவின் தரிசனம்
அதிகாலையில் வாசலில் அவள் 
கோலமிட்டபடி என் முன்னே..!!

பிரிவின் கொடுமை..!!

சூரியனை  கண்டால்  விடியும்  இரவு ..
உன்  முகம்  கண்டால்  மட்டுமே
முழிக்கும்  என்  கண்கள
உன்  வழித்தடம்  பார்த்தே
என்  விழி  அலையுதடி
உன்  கோலத்தில்  சிக்கி  தவிக்கும்
புள்ளிகளை  போல  சிக்கி
கொண்டதடி  என்  மனசும்
எதையோ  இசைத்த  படி
உன்  கால்  கொலுசு..
 பட  படவென  எதையோ
படிக்கின்றது உன்  கண்கள்..
படிப்பறிவில்லாத  நான்
ஆனேன்  வாசகனாய்
உன்  கண்ணின்  மொழிக்கு..
என்னை  தவிர்த்து  செல்லும்
உன்  விழிகளிடம்  கேளடி..
உன்  வழியே  நான்  வந்த  பின்னணியை..
பிரியமனமில்லாமல்  துடிக்கும்
உன்  இமைகள்  சொல்லுமடி
பிரிவின்  கொடுமையை..
வழிந்தோடும்  என்  விழிநீர்
சொல்லுமடி  உன்  பிரிவின்  வலியை..!!

பாத கொலுசு...









உன் பாத கொலுசுக்கு
யாரடி சொல்லிகொடுத்தது
இசையை ??
எந்நேரமும் எனக்கு
பிடித்தமான பாடல்
வரிகளாய் இசைகின்றது..!!

கண்கள்...







நினைத்ததையெல்லாம் பேசிவிட
தான் முனைந்தேன்....
ஏனோ பிரமித்து நின்று போனேன்
உன் கண்கள் பேசும்
அழகை ரசித்தவனாய்..!!

போர் குற்றவாளி...








நீ ஒரு போர் குற்றவாளியடி
என் விரல்களுக்குள்
போரை மூட்டி விட்டாய்..
யார் உன் விரலை
முதலில் பிடிப்பதென்று !!

காதல்????








இன்னதென்று 
விவரிக்க 
முடியாத 
வினாத்தாள் 
காதல்..!!

தேவதை...!!


தேவதை உன்னை அலங்கரிக்க
நீ நடந்து செல்லும் பாதையெல்லாம்
பூக்கள் தரும் மரங்கள்யாவும் 
இன்று அலங்கோலமாய் நிற்கின்றன
தன் பூக்களை உதிர்த்து..!!

முதல் சந்திப்பு..!!


உன்னை தேடியே என் பயணம்
நீண்ட காலமாய் நீளும் தூரமாய்
நீண்டு கொண்டு போனதே ..
இந்த சின்ன வாழ்கையில் ..
விடியலாய் அமைந்தது
என்னிரவுகளுக்கு உன் வரவு ..!!
உனக்குள் இருந்த பயமும்
மாண்டுபோனதோ ?
விம்பியழும் சின்ன குழந்தை
போல வெட்கத்தில்
தலை சாய்த்தவளாய்  ..!!
தாங்கி கொள்ள தோள்
கிடைத்ததும் தன் பாரத்தை
எல்லாம் இறக்கிகொண்டிருந்தாள் ..
இரு துருவ காந்தங்களை போல
ஒட்டாமல் அசை போட்டது
எங்கள் உதடுகளும் .!
அவளின் துப்பட்டாவோடு ஒட்டி
உரசி உறவாடி கொண்டிருந்தது
என் சட்டையும் பதிலுக்கு ..!!
தூண்டிலில் விழும் மீன் போல
அவளின் கன்னக்குழியில்
சற்றே பாராமல் விழுந்தேன்
தத்தளித்தேன் ஆனந்தத்தில் மீளமுடியாமல்
தயக்கத்தோடு முதல் முதலாக
பற்றினால் என் விரல்களை ..
அப்பா எத்தனை இருக்கம் ..
அவளின் விரல் பினைப்பினில்
எனது விரல்கள் ..
என் ஒவ்வொரு விரல்களுக்கும்
ஒரு காதலியாக அவள்
பிஞ்சு விரல்கள் ..
கொஞ்ச நேரம் கொஞ்சி
குலாவிய பின்......
என் ஒவ்வொரு விரல்களின் செல்ல
காதலிக்கு டாட்டா காட்டி ..
அவளின் கைரேகையை நகல்
எடுத்தவனாய் நகர்ந்தேன் ..!!
 



                                              30 நாட்கள் விரதமிருந்து
                                               ஏக்கத்தில் தன் உடல்
                                          மெலிந்து தனக்கானவனுடன்
                                                களைந்து செல்லும்
                                          மேகக்கூடங்களில் மறைந்து
                                       கலவி கொண்டு முடிக்கின்றது
                                             தன் விரதத்தை நிலவு..
                                             அம்மாவாசை அன்று ..!!




 அவளை பற்றி
வார்த்தைகளால்
வழிமொழிவதெல்லாம்
பொய் மொழியே..
ஏனென்றால் கற்பனைக்கு
எட்டாத கவிதை அவள்..
கவிஞர்களால் வடிக்க
முடியாத கவிதை அவள் ...!!
சிற்ப்பிகள் செதுக்கிடாத
சிலை அவள்..
ஓவியன் வரைந்திடாத
ஓவியம் அவள்..
கடலினில் முளைக்காத
முத்து அவள் ..
பூமிக்கு தந்து விட்ட தேவதை...
என் சொத்து அவள் !!

காதல் சிசுவதை



 
                                              கருவிலே கொல்லப்பட்ட
                                              சிசு போல என் காதலும் ...
                                              கற்பனையிலே உருவாகி
                                              கருவுற்றதும் முடிவுற்றது ..!!

College life....

கூண்டு கிளிகளாய் 
சுதந்திரமாய் திரிந்தோம்..
எல்லைகளில்லா எங்கள் 
வானத்தில் ஆனந்தமாய் 
பறந்தோம்...
சிறகொடிந்த சிட்டுக்குருவிகளாய் 
மனம் குன்றிபோனோம்...
கல்லூரி கடைசி நாளில்..
20 வருட வாழ்க்கை 
பயணத்தை 2 பக்கங்களில் 
அடைத்து விட்டனர் 
சுய குறிப்பு என்ற பெயரில்.. இறுதியில் ...!!

உன்னை சுமக்க...




முழுமதியாய் 
உன் முகம்..
விண்மீன்களாய் 
உனதிரு கண்கள்..
மூன்றாம் பிறை போல 
அதன் இமைகள்..
ஒரு வண்ண வானவில்லாய்
இரு இதழ்கள்..
மொத்தத்தில் நீ என் 
தனியுலகமடி  ..
உன்னை மையமாக 
வைத்து சுற்றும்
நான் தனியொரு பூமியடி..!!
//உன்னை சுமக்க...//

கைபேசி முத்தம் ...






 


உன் கையினால்
எழுதிய முத்தம்
என் கைபேசியை
அடைந்ததும்
முற்றுபெறுகின்றது
எய்த அம்பு தன்
இலக்கை அடையாததை
போல..!!

பறக்கும் முத்தம் :..







கன்னியவள் தரும்
முத்தங்கள் யாவும்
காற்றிலே தற்கொலை
செய்து கொள்கின்றன
கண்ணாளனை
சேரமுடியாமல் ..!!

திருமண வாழ்த்து...

 
சொர்க்கத்தில்  நிச்சயிக்க,
சொந்தங்களின்  ஆசிகளோடு,
இரு  வேறு  மனம் ஒன்று  தான் என கரம்  பிடிக்க,
இருதயம்  என்ற  சொல்...
இரண்டானாலும்,
 இறுதிவரை...
அதில்  இடம்  உனக்கு  மட்டுமே 
என  அக்னியின்  சாட்சியாக  இப்பூவுலகில்
மணமுடித்து  இல்லறம் தொடங்கும்
என்  அன்பு  தோழிக்கு
 திருமண வாழ்த்து........

கல்லறையில்(in S/W Engr) ஒரு கவலை

















மௌன விரதம்
இருக்கும் எனது
mobile-ல் ஒரு Program
நீ Silent-ல் இருந்தாலும்
சிணுங்க வேண்டும்
என்னவளின் அழைப்பு
வந்தால்..!!

உன் பதிலுக்குகாக நான்......



                                                        அன்பே நீ மௌனமாய்
செல்லவதால்
விடை  கிடைக்காத
விடுகதையாகவே
உள்ளது என் காதல்..
உனக்கு தான்
தோல்வியே பிடிக்காதாமே
அதனால் தான்
உன் மௌனத்தை 
கூட கலைக்க
நினையாமல் 
நான் தோற்றுக்கொண்டே
இருக்கின்றேன்
என்  காதலுக்கு பதில்
கூட  தெரியாமல்..
உன்  மௌனம் என்று  கலையும் ??
உன் பதிலுக்குகாக நான்......

வெட்கமோ??


பூக்களுக்கும்
வெட்கமோ???
தன் காதலை
வெளிபடுத்த
வண்டுகளை
       தூதுவிடுகிறதே ...!!

நினைவுகளாக நீ






நினைவுகளாக நீ
என்னுடன் எப்போதும்
உறவுகளாக நம்
காதல் நம்முடன்
நான் மட்டும் அழ்ந்த
சிந்தனையில்...
நம் உரையாடல்
எப்போதென்று

விடிந்த நாட்கள்
இருலாமல் போக...
இருண்ட இரவுகள்
விடியாமல் தொடர...
என் உலகம் மட்டும்
இயற்கைக்கு புறம்பாக
சுற்றுதே..!!

கிராமத்து காதல்

மழை விடுத்த பின்
லேசான தூரலில்
கைகோர்த்து நடந்த
ஈரமான சாலை

சில்லென்று ஓடும்
சிறிய மனரோடையில்
உன் பாத சுவடுகளில்
என் பாதத்தை மெல்ல
மெல்ல அழியாமல்
பதித்து நடந்த நாட்கள்

தவறென்று தெரிந்தும்
உன் பாதத்தை தொட
முந்தியடித்து என்
கால்கள் நடக்க....

ஊர் வந்து விட்டதென்று
நீ ஒதுங்கி நடக்க...

ஒடுங்கி தான் போகிறது
என் மனம்
நாம் நடந்து வந்த
பாதையை எல்லாம்
பார்த்து கொண்டே..!!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive