என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!

நகம் கடிக்கும் அவளுக்கு ஒரு கவிதை:




மத்த விரல்களை பார்த்து
சுண்டு விரல் ஆதங்க பட்டது
தான் மட்டும் குட்டையென..  
மத்த விரல்களெல்லாம்
சுண்டு விரலை கண்டு
போறாமை கொண்டது..
அவன் மட்டும் அவள்
உதடுகளுக்குகிடையில்
எந்நேரமும் உறவடுகிரானே என..!!

கண்மொழி

பார்வையற்றோர் பள்ளி..
காதுகேலார் பள்ளி..
இவரிசையில் கண்பேசும் 
பள்ளியையும் சேர்க்க வேண்டுமடி
ஏதோ ஏதோ பேசிவிட்டு செலும்
உன் கண்மொழியையும் புரிந்துக்கொள்ள..!!

காம கரண்ட்



உதடோடு உதடு உரசினால்
உஷ்ணம் உண்டா கு மாமே.. எப்படி ?
சொல்லடி நானும் எடுக்க விரும்புகிறேன் 
காம கரண்ட்  உன் அனுவுலையில் !!

இதழ் முத்தத்தில்:



உடம்பில் உஷ்ணத்தை
உண்டாக்கும் கதிர்வீச்சு இல்லா 
காம ரசம் உன் எச்சில்..!!

நிரம்பட்டும் உன் வீட்டு குப்பைதொட்டி:



உன் மனதை தான் என் நினைவுகளால் 
நிரப்ப முடியவில்லை.. போகட்டும்
உன் வீட்டு குப்பைதொட்டியாவது
நிரம்பட்டுமே என உனக்காக
கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை !! 
 

கனவு !!



இமை மூடி நானுறங்க
என் சிந்தையில் சிறிது நேரம் 
நீ வந்து செல்லும் 
ஜன்னலோர பேருந்து பயணம்  !!



கிறக்கத்தில் தோய்ந்து கிடக்கும்
உன் கழுத்தினை சற்றே தூக்கி
இதழ் கவ்வையில்..
உன்னை அறியாமல்
ஈடு கொடுக்கிறது
உந்தன் கால்கள்
மெல்ல மேலே எழும்பி..!!

வெறுப்பு



நேற்று நாம் கைகோர்த்து
நடந்த இடத்தில
இன்று நான் மட்டும்
தனியே நடக்கையில்
தானாய் என் கைகள்
உன் கைகளை பற்றிட தேட..
உதறி செல்கிறது 
மனம்  முன்னே..!!

வெண் முத்துக்கள்




சிக்கிக் கிடக்கின்றன
மீண்டெழமுடியாத
அந்த வெண் முத்துக்கள்
உன் கோலத்தில்..!!

விளையாட்டு பொம்மை



ஒளிந்து விளையாட
உனக்கு பிடிக்குமென்பதால்..
நானே மேகமாகி
உன்னை என்னுளே
மறைத்து வைத்தேன் நிலவே..!

காதலனின் திருமண வாழ்த்து !!




சுற்றமும் சூழ வருகை தந்து
வாழ்த்த அழைக்கிறாய்..
வாழ்த்த வந்த உன் காதலனை
எந்த சுற்ற சூழத்தில்
சேர்க்கபோகிறாய்  பெண்ணே ??

விலைமாது ஒரு சின்ன கற்பனை :

பெண்ணுக்கும் அடிமை
பெண்ணே நீ ஏற்றும்
போதைக்கும் அடிமை..
நீ ஏற்றிய போதையில்
வாழ்கையை மறந்தேன்..
ஏறிய போதையில்
என்னையே மறந்தேன்..
பார்வையும் பாதையும் மங்கிபோக
பதையே இல்லாத பாதையில்
பயணித்தேன்  என்பதை அது
பயனற்ற போது தான் உணர்தேன்..
போதை தெளிகையில்
நீயுமில்லை வாழ்க்கையுமில்லை..!!

??



விடிந்ததும் எழுந்து
விடுகின்றது சூரியன்..
தலை காட்டியதும்
தலைமறைவாகிறது நிலவு..
நீயும் நானும் சந்திக்காமலே
நீளுகின்றது இந்நாட்கள்..!!

முத்தம் :



விளையாட்டாக நான் கேட்க..
விளையாட்டாக நீ கொடுக்க..
ஈரமானது கன்னம் ..
தன்னிலை திரும்ப தவித்த மனம்
தடைபட்டது மூச்சின் ஓட்டம்  சிரிது நேரம் !!


நிறைய காதல் தோல்விகளை
சந்தித்திருக்க கூடும் கடல்..
தன் தண்(கண்)ணீரெல்லாம் 
உப்பாக வெளிப்படுகிறது..!

மன மடல்

இன்பமாய் இல்லற வாழ்வை தொடங்க
இரண்டடியில் திருக்குறள்
அவள் மன மடலில்..தலைப்பாக..
ஓர் அடி கொண்ட என் பெயரை
காணவில்லை மணமகன் இடத்தில்..!

2012 world ends !!

இவ்வுலகமே வாழ்ந்து முடிய போகிறது..
இன்புற வாழ வேண்டிய
நாம் ஏன் கண்ணே பிரிந்து வாழ வேண்டும்?
முடியபோகும் இவ்வுலகிற்கு 
முன் வாடி நாமும் கைகோர்த்து,
காதலித்து, கல்யாணம் செய்து, கலவி கொண்டு..
ஒரு வாழ்வை வாழ்ந்து  முடிப்போம்..!!

சந்திப்பு..



நெடுநாட்களுக்கு பின் ஒரு சந்திப்பு..
கும்பாபிஷேகத்தில்..
கண்ணீர் தீர்த்தால் நனைந்தோம்..!

தனிமை:


சோகமானாலும் சுகமனாலும்
முதலில் பகிர்ந்துகொண்டு
என்னேரமும் கலங்கடிக்கும்
தனிப்பட்ட தோழன் அவன்!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers