Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, March 31, 2011
கூண்டு கிளிகளாய்
சுதந்திரமாய் திரிந்தோம்..
எல்லைகளில்லா எங்கள்
வானத்தில் ஆனந்தமாய்
பறந்தோம்...
சிறகொடிந்த சிட்டுக்குருவிகளாய்
மனம் குன்றிபோனோம்...
கல்லூரி கடைசி நாளில்..
20 வருட வாழ்க்கை
பயணத்தை 2 பக்கங்களில்
அடைத்து விட்டனர்
சுய குறிப்பு என்ற பெயரில்.. இறுதியில் ...!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
முழுமதியாய்
உன் முகம்..
விண்மீன்களாய்
உனதிரு கண்கள்..
மூன்றாம் பிறை போல
அதன் இமைகள்..
ஒரு வண்ண வானவில்லாய்
இரு இதழ்கள்..
மொத்தத்தில் நீ என்
தனியுலகமடி ..
உன்னை மையமாக
வைத்து சுற்றும்
நான் தனியொரு பூமியடி..!!
//உன்னை சுமக்க...//
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Friday, March 18, 2011
உன் கையினால்
எழுதிய முத்தம்
என் கைபேசியை
அடைந்ததும்
முற்றுபெறுகின்றது
எய்த அம்பு தன்
இலக்கை அடையாததை
போல..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கன்னியவள் தரும்
முத்தங்கள் யாவும்
காற்றிலே தற்கொலை
செய்து கொள்கின்றன
கண்ணாளனை
சேரமுடியாமல் ..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, March 12, 2011
சொர்க்கத்தில் நிச்சயிக்க,
சொந்தங்களின் ஆசிகளோடு,
இரு வேறு மனம் ஒன்று தான் என கரம் பிடிக்க,
இருதயம் என்ற சொல்...
இரண்டானாலும்,
இறுதிவரை...
அதில் இடம் உனக்கு மட்டுமே
என அக்னியின் சாட்சியாக இப்பூவுலகில்
மணமுடித்து இல்லறம் தொடங்கும்
என் அன்பு தோழிக்கு
திருமண வாழ்த்து........
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
மௌன விரதம்
இருக்கும் எனது
mobile-ல் ஒரு Program
நீ Silent-ல் இருந்தாலும்
சிணுங்க வேண்டும்
என்னவளின் அழைப்பு
வந்தால்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Monday, March 7, 2011
அன்பே நீ மௌனமாய்
செல்லவதால்
விடை கிடைக்காத
விடுகதையாகவே
உள்ளது என் காதல்..
உனக்கு தான்
தோல்வியே பிடிக்காதாமே
அதனால் தான்
உன் மௌனத்தை
கூட கலைக்க
நினையாமல்
நான் தோற்றுக்கொண்டே
இருக்கின்றேன்
என் காதலுக்கு பதில்
கூட தெரியாமல்..
உன் மௌனம் என்று கலையும் ??
உன் பதிலுக்குகாக நான்......