Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, November 24, 2012
தனக்கு தெரியவில்லையென்றாலும்
எனக்கு தெரியாத சந்தர்ப்பத்தில்
தெரிந்தவள் போல் காட்டிக்கொண்டு
என்னை பழிப்பதில் அவளுக்கொரு இன்பம்..
# நான் எதிர்பாத்து செய்வதே !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ விழி மூடியிருக்கையில் தருகிற
முத்தத்தில் வரும் ஏதோ ஒன்று..
விழித்திருக்கையில் தரும் போது
வருவதில்லை...
# ஃபீல்....
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எல்லாம் எழுதியாகிற்று
கவிதையாக
அவள் மிச்சம் வைத்த
முத்தத்தை தவிர..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
பதன கிடங்கொன்று கட்டி
உலர்ந்து போகாமல்
பார்த்து கொள்ளவேண்டும்
காய்ந்து போகும் உன் உதடுகளை..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா
எனக் கூறும் அம்மாவின்
அன்பை மிஞ்சி விட்டது
அவளின் அன்பு முத்தங்கள்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வேணாம் வேணாம் போடா
என்று நீ கூறும் போதெல்லாம்
அரை குறை வேண்டுதலோ விருப்பம் ஒன்றோ..
ஒளிந்து கிடைப்பதாய் தோன்றுகிறது..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உண்மையாய் சொல்ல
வேண்டுமென்றால்
நான் உன்னை உயிராய்
காதலிக்க வில்லை
.
.
.
உயிருக்கும் உயிராய்
காதலிக்கிறேன்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வெள்ளிதோறும்..
நீ கோவிலுக்கு வருவாயானால்
நான் வாரம்தோறும் வருவேன்..
தெய்வத்தை சுற்றி வரும்..
தேவைதையே உன்னை தரிசிக்க...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ வீட்டை விட்டு
வெளியே சென்று
வீடு திரும்பினால்
ஒரு முறை சூடமேற்றி
பூசணி உடைத்து
சுற்றி போடச்சொல்
ஊர்க்கண்ணும்..
என் கண்ணும் பட்டிருக்கும்..
# அழகி..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தலை குளித்து முடித்ததும்
நீ கூந்தலை பின்னளிடாமல்
ஊஞ்சலாடும் அழகை
எந்த கவிஞனேனும் பார்த்துவிட்டு
பெண் மயில் தோகை விரிக்குமென
எழுதினாலும் ஆச்சரிய பட இல்லை..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உனக்கு என்றால் மட்டும்
என் தேடல் யாவும்
நிகரில்லாததாக தான் இருக்கும்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
பெரும்பாலும் ஹ்ம்ம் என்ற
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஒரு மழை துளியென்றாலும்
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..
பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..
உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..
கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..
தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.
ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னை தொடாத தூறலும்
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
விருப்பம் ஒன்று வரும்போது
வேண்டுதல் இருக்கும்..
ஆம் உன்னை விரும்ப
வேண்டுதல் ஒன்றை
உன்னிடம் வைக்கிறேன்..