Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, October 21, 2012
விரும்பி வரும் எதையும்
நீ ஏற்றுக்கொள்வாய் எனக்
கூறும் போது..
சொல்லி விடத் தான் துடிக்கிறேன்
உன்னை விரும்பும் என்னையும்
ஏற்றுக்கொள்வாயா என..
# அவளுக்காக
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வயலும் வயல் சார்ந்த நிலமும் போல
நனைதலும் நனைந்தபின்
அவளின் தலைத்துவட்டலும்
- நனைந்திணை
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஒரு வார்த்தைக் கூட
என்னிடம் பேசாதே
என்கின்ற போது
எப்படி சொல்லுவேன்
அந்த மூன்று
வார்த்தையை அவளிடம்..
# நீயின்றி எனக்கு உலகமில்லை
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ரோஜா
இதழில்
ஒற்றை
பனித்துளி
அவள்
முகப்பரு..
கோலமிட வைத்த
ஒரு புள்ளியை சுற்றி
வரையப்படாமல் சென்றதே
அவள் முகப்பரு..
போட்டியின்றி வென்றுவிடும்
அழகான உலக அதிசயம்
அவளின் ஒற்றை முகப்பரு..
பருவத்தின்
ஒரு தலை
காதல்
அவளின்
ஒற்றை பரு.
துணையின்றி காயும்
ஒற்றை நிலவு
அவள் கண்ணத்து பரு..
வானுக்கு துணையாக
கொட்டிக்கிடக்கின்றன நட்சத்திரங்கள்
அவள் கண்ணத்தில் பருக்களாக..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காணாமல் போகும்
உன் எச்சில்
முத்த தடங்களை
தேடத்தொடங்கியுள்ளது
என் வீட்டு கண்ணாடி..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
மேகக்கூடலின்றி
பெய்யும்
ஒற்றை
மழைத்துளி
கண்ணீர்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தன் காதலியை வேறொருவனுக்கு
தானே விட்டுக்கொடுத்து
தன் கண்முன்னே
அவர்கள் சந்தோஷத்தில் திளைக்கையில்
இவன் கண் கலங்குவதை பார்க்கையில்
எனை அறியாமல் எனை மீறி
என் விழிநீர்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஓவியன்னென்றால் கடைசியில்
வரைந்திருப்பேன் உன் கண்களை
காதலன் என்பதால்
முதலிலே காட்சிகளாக்க படுகின்றன
என் மனத்திரையில்...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ ஒரு சாயலில்
படுத்துறங்கும் போது தான்
நமக்குள் நெருக்கத்தை
அதிக படுத்துகிறது
இவ்விரவு..
# கட்டி கொள்ளடா கலவா..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தூக்கம் வந்தால் தானே
தூங்குவதர்க்கென்று
அழு மூஞ்சியை காட்டும் அவள்
தலையணையை எடுத்துவிட்டு
மடி தந்தால்
விடியும் வரை விடாமல்
கட்டிக்கொண்டு தூங்குகிறாள்...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நான் தனியாகவே வாழ்ந்துவிடுகிறேன்
உன் துணையின்றி
ஆனால் உன் நினைவுகளை
மட்டும் பரிசளிக்காதே
அவைகள் என்னோடு தனித்து
வாட வேண்டாம்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் கவிதைகளில்
ஒளிந்து கிடக்கும் உன்னை
எந்த விடியலும்
காண போவதில்லை
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சொல்லி தெரியவேண்டியதில்லை
என் காதல்..
நீ என்னை நேசிப்பாயானால்
சொல்லாமலே புரியுமுனக்கு..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தேவதைகளுக்கு இறக்கை இருக்குமென
கட்டிய கூட்டை விட்டு
நீ பறந்து போன பிறகே உதித்தது
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
யாருமற்ற நேரங்களில்
உணரப்படுவது தனிமையல்ல
யாவுமிருந்தும் நீயில்லா தருணத்தில்
உணரப்படுவதே தனிமை..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஒரு காரியம் செய்யும் போதெல்லாம்
வெற்றியா தோல்வியா அல்லாது..
மனம் ஒத்தையா இரட்டையா
போட்டு பார்கின்றது
நீ கிடைப்பாயாயென..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீயே குடியிருகிறாய் என்றாலும்
என் இதயத்தை கேட்டால்
மட்டும் உனக்கு தரமாட்டேன் ..
அதில் தான் எனக்குரிய(யவள்) ..
உயிர் வாழ்கிறது...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
விடியற்காலையில்
இடப்போகும் கோலத்திற்கு
இன்றிரவே ஒத்திகை
பார்த்து கொள்கிறது
பேனாவும் காகிதமும்
காதலை கிருக்கியபடி..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வருகிற வலியெல்லாம்
ஏற்றுக்கொண்டு தான்
வாழ்கிறேன் ..
இன்று நீ தரும்
வலியையும் சேர்த்துகொல்கிறேன்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இரவுக்கும் பகலுக்கும்
சாந்திமுகூர்த்தம் நடத்தி
கனவென்னும் குழந்தையை
பெற்றெடுத்து.. அதற்க்கு
கவிதையென பெயரிடலாம் ..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ முத்தமிடும் போதெல்லாம் ..
நான் நியுட்டனின் மூன்றாம் விதியோடு ..
ஒன்றிணைந்து போகிறேன்...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
அவசர கால வாழ்கையில்
உன் அஞ்சு விரல் பிசைந்து
வைத்த சொற்றுன்டையை சாப்பிடும்
போது மட்டும் சீக்கிரத்தில்
பசி ஆருவதே இல்லை..
( அவளோ டேஸ்ட்டு )
தேவைதை என்றால் எப்படி
இருக்குமென உன்னை கண்டப்பின்
பார்கவேண்டுமென எண்ணியதே இல்லை..
( புல் மேக்கப்பு )
கட்டில் மேல் சண்டையிடும்
போது மட்டும்
உன்னை எதிரியாக
பார்ப்பதே இல்லை..
( பஞ்சு மெத்தையில் உன் அன்பு பாக்சிங் )
உன் கூந்தலில் வாடி போகும்
பூக்களுக்காக நான்
கவலை கொள்வதே இல்லை..
( அது பெண்ணாக இருக்கும் வரை )
உன் மடி தூக்கம்
கிடைக்கும்போதெல்லாம்
கனவுகளை வரவேற்பதே இல்லை..
( நிஜங்கள் இருகிறதே )
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வெற்றிலை பாக்கு
தாம்பூலம்
ஏதுமில்லாமல்
அழையா விருந்தாளியாக
வருகை தருகிறது
அவள் நினைவுகள்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என்னை கடந்து செல்லும்
பேருந்தில் எல்லாம்
நீ பயணிக்கிறாய என
நீ எப்போதும் விரும்பியமரும்
ஜன்னலோர இருக்கைகளாய்
தேடி அலைகிறேன் உன் முகத்தினை..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
பொழுது விடிவதும்
பொழுது போவதும்
என் கண்களுக்கு தெரிவதே இல்லை ..
நினைவெல்லாம் நீயாக இருக்கும் போது ..