Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Monday, June 27, 2011
விடியலில் கண் விழிக்க
வெண்மதி அவள் நீராடிவிட்டு
தேநீரோடு கையை நீட்டுவாள் ..
சக்கரை இருக்கின்றதா என்றால்
உதட்டை கடித்து விட்டு
ஹ்ம்ம் இருக்கின்றது என்பாள்
என் இனியவள் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இந்த கோடை காலத்திலும்
போர்வையா என்று விலகினால்
திட்டுகிறாள்.. காரணம் கேட்டால்
மாமா நான் எப்போதும் உன்
கதகதப்பிலே இருக்கவேண்டும் என்கிறாள் ..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எதிர்மறையோடு நீ
சண்டை போட்டாலும் ..
சண்டை முடிந்த
மூன்றாவது நிமிடத்தில்
ஒரு முத்தத்தோடு
உன் முசுடுகளை வெட்டி எரிந்து
கட்டி அணைத்து முடிப்பாயே ..
ஹ்ம்ம் நீ செல்ல கோபக்காரி தான்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
செல்லமாக என் கன்னத்தை
கிள்ளி விளையாடுவாள்
கோபம் வந்தால் காதை திருகுவாள்
இப்படியே இவள் சேட்டைகளெல்லாம் தொடரும் ..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
முறையில்லாமல் உந்தன்
நினைவுகள் உரிமையோடு
என்னுடன் சண்டை போடுதடி ..
நான் அவற்றிற்கு விடுதலை
தருவதில்லையாம் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வெளி வட்டாரத்தில் முத்தம் கேட்டால்
கண்டனம் தெரிவிப்பாள்
செய்கையில் வினவினால்...??
சாயம் பூசாத உதடு
சிவந்து விடுமாம் வெட்கத்தில்...!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சமைத்து முடித்தபின் எனக்காக
சாப்பிடாமல் காத்திருப்பாள்
சரி வா சாப்பிடலாம் என்று
இரண்டு தட்டில் போட்டால்...
சின்ன குழந்தையை போல
அடம்பிடிப்பாள் ஆ என வாயை
திறந்து வைத்துகொண்டு ஊட்ட சொல்லி..!!