Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Monday, November 18, 2013
உன் வீடு முழுக்க
விளக்கேற்றிவிட்டாய்..
என் வாசலும் உனக்காக தான்
காத்துக்கிடக்கிறது !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Tuesday, November 12, 2013
உன்னை காதலிக்கையில்
உன் கவனத்தை ஈர்க்க செய்த
குரும்புகள் தான்..
இன்று என் கவனத்தையே
இழக்க செய்கிறது !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, November 7, 2013
இரவென்றால்
உனக்கு இருட்டு பயம்..
எனக்கு பயமே
உன்னினைவு
வருமென்று தான் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நினைவு பயங்களுக்கு பெயர்
நீமோபோபியாவாம்..
நீ இல்லாமல் போனால்
என்னவென்று யாரும்
சொல்லவில்லையே
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, October 31, 2013
ரோஜாவே அழகு தான்
அதற்க்கெதற்க்கு மல்லிகையால்
அலங்காரமெல்லாம் ?
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, October 26, 2013
அன்பை கடன் கொடுக்க முடியுமா ?
சொல்ல முடியாதென்றாலும்
நீ கொடுத்தால் வட்டியுடன்
திரும்பக்கிடைக்கும் என் காதல் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ உதிர்த்து போகும்
உன் கூந்தல் நீர்த்துளிகளில்
உன் வீட்டு உப்பரிகையின் ரோஜா செடிகள்
வெள்ளிக்கிழமையானால் தானும்
தலைக்குளிக்க தவமிருகின்றன !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சொல்லாமல் தான்
செத்துப்போனது
என் காதல்..
சொல்லி சொல்லியே
சாகடிக்கிறாய் நீ..
#உன்னை பிடிக்கவில்லை !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஆறுதலுக்காய் அலைந்தேன்
அரவணைத்து கொண்டது
உன் நினைவுகள்
மாறுதல் மட்டுமில்லை
இக்காதலின் அவஸ்தையில்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் அணுகுமுறை தான் சரியில்லை
உன்னை அணுகிய உடனே
சொல்லவிடாமல்..
சொல்ல துடித்த உதடுகளை
கட்டி போட்டு விட்டன காதல் பயம் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தனிமையான ஓர் பிரயாணத்தில்
தோதாய் உன் நினைவுகள்
அருகே அமர்ந்துக்கொள்ள..
கடந்து விடுகிறது எவ்வளவு
தூரமானாலும்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இருட்டின் பயம்
உன் உதட்டின்
காயம் சொல்லும்..
# நெருக்கம்
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இரவு வானிற்கு
இரண்டாம் நிலா
நீ !!
இரவு கடந்திட
விடியலிலும்..
உன்னை நீங்கா
வானம் நான் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் எழுத்து பிழைகளை
ரசிக்க தொடங்கியலிருந்து
கிடைத்தாள் எனக்கொரு
கவிதை காதலி
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தீர்த்து வைக்க முடியா
ஓர் இரவு சண்டையில்
ஒரு முத்தம் போதுமாய் இருக்கிறது
உன் கோபம் தனிய ♥♥
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் கை கோர்த்து நடக்க
ஓர் ஆளற்ற சாலையை
தேடிக்கொண்டிருக்கிறது
என் காதல்
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
அல்ல அல்ல குறையாதது
அட்சையப் பாத்திரமென்றால்..
எழுத எழுத குறையாத
உன் அழகை என்ன சொல்ல..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சந்திக்க தாமதமான நாளொன்றில்
உனக்கு பிடித்த கோன் ஐஸ்க்ரீம் ஒன்றை
வாங்கி வந்து உன்னிடம் நீட்டினேன்
கோபத்தில் பொங்கி வழிந்தாய்
உருகிக்கொண்டிருந்த ஐஸ்க்ரீமை
நானே சுவைக்க தொடங்கிய சிறிது நேரத்தில்
உன்னிடம் எச்சில் ஊறி வழிவதை கண்டு
மீதி ஐஸ்க்ரீமை உன்னிடம் கொடுத்து
உதட்டோரம் வழியும் தேன் கலந்த
ஐஸ்க்ரீமை சுவைத்தேன்
அடடா அதுவல்லவா ஏழாவது சுவை..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எனக்கே தெரியாமல்
என்னை களவாட
பார்க்கிறது
உன் காதல் பார்வை
எதற்கும் ஜாக்கிரதை..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னை விட ஓர் அழகான
உலகம் எனக்கில்லை
உன்னோடு வாழ்ந்திட ஒரு
வாய்ப்பும் எனக்கில்லை
உனக்கே உனக்காய் வாழ்கிறேன்
யாரோ ஒருவரின் உலகில்
அகதியாய்...